Saturday, 5 November 2011

சங்கமம்

அன்பானவளே !
உன்னை வரவேற்கிறேன் ...
என் இரண்டாம் கவிதைத்தொகுப்பின்
அடையாளச் சின்னமே
உன்னை ஆராதிக்கிறேன் !
தூண்டிலில் மாட்டிக்கொண்ட
மீனைப் போல் நீ என் இதையத்தில்
எப்படிச் சிக்கிக் கொண்டாய் ?

இப்போது எல்லாம் உன் நினைவலைகள்
அடிக்கடி வந்து என் தூக்கத்தை 
அமர்க்களம் செய்வதால் 
எத்தனையோ இரவுகள் 
பகலாகவே விடிகிறது !

உன்னுடன் சின்னச் சின்ன சந்திப்புகளும் 
உன் மின்னல் பார்வையும் ...
அவ்வப்போது பூமியில் வந்து போகும் 
நில நடுக்கத்தைப் போல்  என்னை
அசைத்து விட்டுச் செல்கிறது !

அன்பே !
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்
நீ உன் தோழியோடு வந்தபோது
உன் உதட்டிலிருந்து சப்தம் இல்லாமல்
ஒரு வெள்ளை ரோஜா காற்றில் பறந்தது!

எதிரில் வந்த நான் திரும்பிப் பார்த்தேன்
என் கண்களுக்கு எட்டிய தூரம்
எந்த மனிதரும் இல்லை!

தாமதமாகத் தெரிந்துகொண்டேன்
அந்தப் 'பூ' என்னக்காக உதிர்ந்ததென்று!

நினைத்துப் பார்க்கிறேன்
இது நட்பின் அடையாளமா ?
இல்லை
இரண்டு இதயங்களின் சங்கமிப்பா ?

o

இந்த பூக்களோடு கொஞ்சகாலம்

அன்பு மாணவ, மாணவிகளே!
உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகளைச் 
சேமித்துக்கொண்டு வந்தவன் நான்...

ஏனோ புரியவில்லை 
உங்களைப் பார்த்தவுடன் 
என் கவிதைப் பாத்திரம் முழுவதும்
கண்ணீர்ப் பூக்களால் நிரம்பிவிட்டன .

சோகம் என்னைச் சுற்றி 
வேலி போட்டு விட்டது .

'சிரிப்பூ' இன்று காலை 
என்னிடத்தில் தாமதமாகவே பூத்தது .

ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும்
கடல் அலைகளைப்போல் உங்களின் 
சலசலக்கும் பேச்சு என் காதுகளுக்கு 
இனித் தினமும் கேட்குமா?

துள்ளி விளையாடும் மான்களைப்போல்
உங்கள் குறும்புத்தனத்தை இனிப்பார்க்க முடியுமா ?

இந்தச் சூரிய பூக்களும் நிலவுப் பூக்களும் 
என் வானத்தில் இனி வலம் வருமா ?

இந்தப் பிரிவு என் மனதுக்குள் 
தீயை வளர்த்தாலும் அதில் தேன் வடிகிறது !

இந்தப் பிரிவு மின்னலாய் மறைந்தாலும் 
மனசுக்குள் வானவில்லாய் நீள்கிறது .

இன்று கசப்பாய் இருந்தாலும் 
தொண்டைக்குள்  கற்கண்டாய் இனிக்கிறது .

இந்தத் தித்திப்புச் சுவையோடு வாழ்த்துகிறேன் 
என்னெவென்று தெரியுமா?

மாணவப் பருவம் மனித வளர்ச்சியின் 
இரண்டாம் பருவம் -இங்கு 
அஸ்திவாரம் ஆசிரியர்களால் கட்டப்படுகிறது .

இது மாடிகளாவதும்  மணல் மேடுகளாவதும் 
மாணவர்களின் திறமையைப் பொறுத்தே 
தீர்மானிக்கப் படுகிறது .

ஆசிரியர்களால் சொல்லப்படும் 
ஒவ்வொரு சொல்லும் 
உங்கள் எதிர்கால வாழ்விற்கு 
ஏறிச்செல்லும் ஏணிப்படிகள் !

பயன்படுத்திக் கொள்கிறவர்கள்
வாக்குறுதியைப் போல்
தேய்ந்து போனது .

நமக்குக் கிடைத்த சுதந்திரம் மட்டும் என்ன
சும்மா சொல்லிக் கொள்ள மட்டுமே !

நம் நாட்டில் மக்கள் சிரிப்பதென்பது
தேர்தல் வரும்போது மட்டுமே !

விஷம் போல் ஏறுவது விலைவாசி மட்டுமே !
இங்கு படிப்பு மட்டும் என்ன ?
பழைய பேப்பர் வாங்கும்
கடையைப் போல் ஆனது !

ஆனால் ,சிந்தனை என்பது
மனிதனுக்குச் சிவப்பு ரத்தம் போன்றது !

இனி ,திரு.வி .க .வீதியில்
சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதும்
காந்திசிலை அருகில்
காற்று வாங்க நிற்பதும்
பான்பராக் கடையில்
கியூ வரிசையில் நிற்பதும்
நடிகர்களின் படத்திற்கு
முட்டிமோதி ரத்தம் சிந்தி நுழைவதும்
அவர்களுக்கு ரசிகர்மன்றம் திறப்பதும்

நம் சிந்தனையைச் சிதறடிக்கும்
போதை போன்றது !

நீங்களோ ...
புதிய சரித்திரம் படைக்கப்போகும்
யுக புருஷர்கள் !

உங்கள் பருவத்தில் பூக்கும்
ஒவ்வொரு பூக்களும் போர்களப் பூக்கள் !

இந்தப் பூக்கள் போருக்குப் புறப்பட்டால்
பூமியைப் புரட்டி எடுக்கும் !
ஆகாயத்தைக் கொண்டு வந்து
அருகில் நிறுத்தும் !

இருண்டு கிடக்கும் இந்தச் சமுதாயத்தை
ஒளி மயமாக்க வந்த பாரதிதாசனின்
பரம்பரைப் பூக்கள் நீங்கள்  !

முடங்கிக் கிடக்கும் இந்தச் சமுதாயத்தை
நடக்க வைக்கப் போகும் வல்லமைப் பூக்கள் !

எந்த பளபளப்புக்கும் எந்தச் சலசலப்புக்கும்
மண்டயிடாத மாவீரர்கள் நீங்கள் !

எனவே  இலட்சியம் என்பது 
உங்களுக்கு உயிராய் வளரட்டும்!

புதிய சிந்தனை என்பது மனித வளத்தை
மதிப்பதாக அமையட்டும் !
வசந்தம் உங்கள் கதவைத் தட்டட்டும் !
   
O

Tuesday, 1 November 2011

கனவுகளும் கற்பனைகளும்



அம்மா கர்ப்பத்தில் சுமந்தவள் .
அப்பா கற்பூரமாய் எரிந்தவர்.

இருக்க இடம் உண்ண உணவு  உடுக்க உடை 
இம்மூன்றுக்கும் ஆதாரம் அப்பா !

கனவுகளையும் கற்பனைகளையும்
நிஜமாக்கித் தந்தவர் .
குடும்பம் என்ற சொல்லுக்கே 
இலக்கணமாய்த் திகழ்ந்தவர் .

மனைவியையும்  மக்களையும் 
இரு கண்களாகப் போற்றியவர் .
குடும்ப பாரம் சுமந்தே 
அப்பாவின் தலை வழுக்கை ஆனது !

பிள்ளைகள் பிற்காலத்தில் உதவும் என்று 
மாடாய் உழைத்து ஓடாய்ப் போனவர் .

சம்பாதிக்கும் வரையில் மரியாதை 
இல்லாதபோது அவருக்கோ அவமரியாதை.

நேற்றைய நிகழ்ச்சிக்கெல்லாம் இவரே முதல்வர் .
இன்றோ முடங்கியதால் ஓரம் கட்டிய முடவர் .

பிள்ளைகள் தாங்கும் என்று 
ஓடி வந்த போது...
ஊன்று கோலே தாங்கியது .

எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் 
முதியோர் இல்லத்தில்தான் அப்பா !

அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளைப் 
பன்னீரால் நனைத்தனர் .
பிள்ளைகளோ இருவரையும் 
கண்ணீரில் கரைத்தனர் !

o                           
Facebook Google Digg Pinterest