Thursday, 1 November 2012

நூல் வெளியீட்டுவிழா

நூல் வெளியீட்டுவிழா 




                             

              

                      

               18.03.2007.அன்றுவிழுப்புரம் வெற்றிப்பதிப்பகம் நடத்திய "அமுதமழை "       புத்தக வெளியீட்டு விழாவில்பதிப்பாளர் கவிமாமணி தே .இராமதாசு அவர்கள்
கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி அவர்களின் தமிழ்ப்பணியை பாராட்டி
"கவிப்பொழில் "எனும் விருதளித்து சிறப்பித்தார் . விழாவில் திரளான        கவிஞர் பெருமக்களும், எழுத்தாளர்களும் பொதுமக்களும்,மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.






Wednesday, 31 October 2012

தங்கர்பச்சானுடன்





          கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி திரைப்படஇயக்குனர் தங்கர்பச்சானுடன் .


நூல்வெளியீட்டு விழா







             
            விழுப்புரத்தில் 12.05.2012. அன்று பேராசிரியர் த.பழமலய் அவர்கள்  தொகுத்த "முனேற்றவந்த  மூன்று தலைமுறைகள்"நூல்வெளியீட்டு விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி ,அச்சமில்லை ஆசிரியர் ந. இறைவன்  மற்றும் சான்றோர்பெருமக்கள் கலந்து கொண்டனர். 

            அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களிடம் கவிஞர்ஜா.வினாயகமூர்த்தி நூலைப்  பெற்றுக்கொண்டார். நூலை தொகுப்பித்தவர் நல்லாசிரியர்  தெ.வே.சஞ்சீவிராயன் அவர்கள் ஏற்புரையோடு விழா சிறப்பாக நடைபெற்றது.






Sunday, 7 October 2012

விழுப்புரம் கம்பன் விழாவில்

விழுப்புரம் கம்பன் விழாவில் 





                 5.8.1990.அன்று  விழுப்புரம் கம்பன் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவியரங்கத்தில் கலந்துகொண்டபோது கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி எழுதிய  தனது முதல் கவிதைத் தொகுப்பான "மனசுக்குள் மகரந்தம் " என்ற  கவிதைத் தொகுப்பினை அளித்து மகிழ்விக்கிறார் .







Wednesday, 3 October 2012

பாராட்டுவிழா




பாராட்டுவிழா 


                     தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ .ஜெயலலிதா அவர்கள்
  டாக்டர்  G .விஸ்வநாதன் Ph.D.,அவர்களை தமிழ்நாடுஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை  வேந்தராக நியமனம் செய்ததற்கு விழுப்புரத்தில்02.09..2012.அன்றுஆசிரிய பெருமக்களும் ,மாணவர்களும் 
 முதல்வருக்கு  நன்றி  தெரிவித்தும் ,துணைவேந்தரை பாராட்டும் வகையில் விழாநடைபெற்றது .விழாவில்மாவட்டஆட்சியர்திரு .வா .சம்பத் I.A.S., மற்றும்
 காவல் துறை துணைத் தலைவர் திரு .கே .சண்முகவேல் I.P.S.,அவர்களும் 
கலந்துகொண்டு துணைவேந்தருக்கு நினைவுப் பரிசு வழங்கிபாரட்டினர் .
                           விழாவினை ஆசிரியமாமணி தெ .வே .சஞ்சீவிராயன் ,
உதவிதொடக்க  கல்வி அலுவலர் (ஓய்வு )G .சீத்தாராமன் மற்றும் ஆசிரியர்கள் J .வினாயகமூர்த்தி ,S .சரவணன் ,M .கணேசன்ஆகியோர் ஒருங்கிணைத்தனர் .




நூல் வெளியீட்டு விழா



         கவிஞர் ஜா. வினாயகமுர்த்தி யின்  "வெள்ளை வண்டி"  நூல் வெளியீட்டு  விழா விழுப்புரத்தில் 23.05.2009.இல் நடைபெற்றது .நூல் வெளியிட்டவர் கவிஞர்    சக்தி  நூல் பெற்றுக்கொண்டவர் முனைவர்  G .விஸ்வநாதன்                 மற்றும்      கவிஞர் பேரா .த.பழமலய், டாக்டர்  சி.மா .பாலதண்டாயுதம் , நீதிபதி ப .உ .செம்மல் ,ஆசிரியர்  த. பாலு,  ஆர் .வி .தனுசு, மற்றும் சான்றோர் பெருமக்கள் கலந்துகொண்டு  கவிஞர் அவர்களை பாராட்டிப்  பேசினர் .
 

Monday, 4 June 2012

இந்திய தேசம்



சாதித் தீக்குள் இரையாகும்
சாதாரண மக்கள்

மதத்தின் பெயரில்
மனிதக் கொலைகள் !

தேசமெல்லாம் பொங்கி வழியும்
 ஊழலின் ஊற்றுக் கண்கள் !

விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம் !

வயிற்றில் ஓடுகின்றன
வறுமையின் கோடுகள் !

அரசியல் போர்வையில்
தாராளமாய்  டாஸ்மாக் கடைகள் !

வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
அனுமார் வாலாய்க்
காத்திருப்போர் பட்டியல் !

திரும்பும் திசையெல்லாம்
கொலைக்கொள்ளைகள் !

கொள்ளையர்களின் கையில்
இந்திய தேசம் !

இளைஞர்களின் மனசில்
இன்னொரு சுதந்திரம் !


0

நீ வாழ்க

உப்புக்கும் மிளகாயிக்கும்
உதவாத உன் கவிதை
எனக்கு  எதற்கு ?
என்று என் மனைவி கேட்டாள் .
சட்டென்றுச் சொன்னேன்.
 பாரதி , பாரதிதாசன் ,
கண்ணதாசன்,  வைரமுத்து
துணைவியார்கள் இப்படிக் கேட்டிருந்தால்
விடுதலைக்கு    வித்தாகிய
தீப்பொறி கிடைத்திருக்குமா? 
என்றும் தெவிட்டாதா திரை இசைப்பாடல்கள்
பிறந்திருக்குமா? என்று கேட்டேன் .

எழுதுங்கள் என்றாள் .
நீ வாழ்க என்றேன் !
என் கவிதைத் தேர் நகர்ந்தது...


0  

Monday, 21 May 2012

காக்கிக்கும் கருப்புக்கும்


நேற்று வரை
அடிமை விலங்காய்
முடங்கிக் கிடந்தோம் . 

காசுக்கும்  மதுவுக்கும் 
கட்டில்களாய் மெத்தைகளாய்...

இன்று 
கிழக்கும் மேற்கும்சந்தித்துக்கொண்டன .

தனித்தனிக் கூண்டில்
அடைத்து   வைக்கப் பட்டிருந்த
சிங்கங்களும் புலிகளும் ஒன்றையொன்று
கட்டித் தழுவிக் கொண்டன.

இனி 
எந்தச் சாட்டை அடிக்கும் மண்டிஇடாது .
எந்த அறுசுவைக்கும் நாக்கை நீட்டாது .

நீண்டநாட்களாய் இவர்களின்
மனக்காட்டில் புகைந்துகொண்டிருந்த கோபம்
இன்று நெருப்பானது. 

எரியப்  போவது 
மண் குடிசைகள் அல்ல ...

இப்போர்வீரர்கள்
அலங்கார வார்த்தைகளையும் 
அலங்கார பொம்மைகளையும்
கேட்கப் போவதுமில்லை.
பார்க்கப் போவதுமில்லை. 

 ஏனென்றால்
 கேட்டுப் பார்த்து விட்டார்கள்
 பார்த்துக் கேட்டுவிட்டார்கள்.

எந்த பயனும்
உழைப்பவனை உயர்த்துவதாக இல்லை.

இந்த ஏற்றத்தாழ்வுகளைப்
 பகிர்ந்து அளிக்கவே   உழைக்கும் வர்க்கம் 
புறப்பட்டுவிட்டது...

இவர்கள்
 புரிய வைப்பார்கள்.
 பூமியை நனைய வைப்பார்கள். 

காக்கிச் சட்டைக்கும்
கருப்புச் சட்டைக்கும்
இனி வேலை இல்லை 
என்று சொல்ல வைப்பார்கள் .

 0 

Sunday, 20 May 2012

கான்வென்ட் டீச்சர்கள்



படப்பிடிப்பிற்குச் செல்வதைப்போல்
ஒப்பனையோடு கையில்
ஒரு அழகிய கைப்பை! 

 துணிக்கடையில் வரவேற்கும் 
 அலங்கார பொம்மைகளைப்போல் 
வண்ண வண்ண அணிவகுப்பு ! 

அரைகுறையாய்ச் சாப்பிட்டு
 அவசரமாய்ப் பஸ் பிடித்து
 மணி அடிப்பதற்குள் 
பள்ளியின் முதல்வரின்
 பார்வைக்குப்   பவ்வியமாய்
 வணக்கம்போட்டு 
வகுப்பறையில் நாளும் ...  

வீட்டில்தொல்லை தாங்காமல்
 மூட்டை முடிச்சிகளோடு 
பிஞ்சுக் குழந்தைகளையும்
 கொண்டு வந்து தள்ளிவிட்டுச்
 செல்லும் பெற்றோர்கள்...

அழமட்டுமே தெரிந்திருக்கும்
 குழந்தைகளுக்கு அ, ஆ ....
சொல்ல வைத்துத் 
தொண்டத்தண்ணி வற்றிப்போகும் 
 கான்வென்ட் டீச்சருக்கு ! 

அடிக்கடி தேர்வு எழுதி 
அலுத்துப்போகும் குழந்தைகள் !

 விடைத்தாளைத் திருத்தித் திருத்தி 
வேதனையில் மூழ்கிப்போகும்
 கான்வென்ட் டீச்சர்கள்...

அதிக மதிப்பெண்கள்  வாங்கலையே
 என அலட்டிக்கொள்ளும் பெற்றோர்கள் ! 

பள்ளியின் தரத்தை உயர்த்த
 பள்ளி நிர்வாகியின்
 தரங்கெட்ட அர்ச்சனைகள்! 

இத்தனையும் சுமந்துகொண்டு 
பள்ளியை அலங்கரிக்கும்  
கான்வென்ட் டீச்சர்கள்...

ஆலையில் பிழிந்த சக்கையில் கூட
 எறும்புகள் ஊறும்
இவர்களைப் பிழிந்தால்
ஒரு சொட்டு இரத்தம் கூடக்
கண்ணீராய் மாறும் ! 

இவர்கள் பார்வைக்கு மட்டுமே
சிவப்பு ரோஜாக்கள்!

வேலை  கிடைக்குமென்று
 வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
புதுப்பித்து ...புது ப்பித்து
இவர்களின் தலைமுடியோ
வெள்ளை அடித்துக்கொண்ட
அதிசயம்தான் நிகழ்ந்துபோனது !

போடுகின்ற சோப்புக்கும்
 அடிக்கின்ற பவுடருக்கும்
 நாளுக்கொரு சேலைக்கும்
 கொடுக்கின்ற ஊதியம் சரியாய்ப் போகும்.

பின்னர் ,அவர்களுக்கு எங்கே
அவர்கள் வாழ்க்கையைப் பற்றி
 யோசிக்க நேரம் !
 யோசிப்பதெல்லாம்
 அவர்களிடம் விட்டுச் செல்லும் 
 பள்ளிக்  குழந்தைகளின் படிப்பை மட்டுமே !

பெருகிப்போனது மாணவர்களின் எண்ணிக்கை
 உயர்ந்துபோனது பெற்றோர்களின்
 நன்கொடையால் ...பள்ளியின் கட்டிடங்கள் !

இன்னும் உயராமல் இருப்பது
 அவர்கள் வாழ்க்கை மட்டுமே !

அலங்கோல ஆட்சியாளர்களின் சட்டத்தில்
அப்பனும் பிள்ளையும்
 அருகருகே அமர்ந்து டி.ஆர் .பி . எழுதிய
அதிசயம் தான் நிகழ்ந்து  போனது !

என்று ஒழியும் இந்த டி.ஆர் .பி .
அன்று தணியும் அவர்கள் தாகம்!


Friday, 13 April 2012

வெள்ளை வண்டி


அன்று இரவு விடியலுக்காக
எங்கள் கிராமம் அமைதியாகக்
காத்துக்கொண்டிருந்தது .

மின்னல் வேகத்தில்
வெள்ளை வண்டி ஒன்று
கிராமத்திற்குள் வந்து நின்றது .

கண்ணிமைக்கும் நேரந்தான்
வண்டிக்குள்ளிருந்து பாய்ந்தார்கள்
எங்கள் குடிசைக்குள் துப்பாக்கிகளோடு !

 "அய்யோ,அம்மா ,அப்பா !"
 என்ற அபயக் குரலோடு
மூச்சு வாங்க வீட்டுக்குள்ளிருந்து
ஓடி வந்தார்கள் எங்கள் பாட்டாளி மக்கள் !

 இந்த ஓலங்கள் ஊரையே உலுக்கிவிட்டன
 அக்கம் பக்கத்தில் உள்ள
அக்கா  தங்கச்சிகளும் தாய்மார்களும்

உயிரைப் பிடித்துக் கொண்டு
உடமைகளை உதறி விட்டு
அரண்டு சுருண்டு ஓடினார்கள் ...
அண்டை ஊருக்குள் அடைக்கலமாக .

அது மட்டுமா
படுக்கையில் பால்குடித்துக் கொண்டிருந்த
பச்சிளங் குழந்தையொன்றை
வாரி அணைத்துக் கொண்டு
ஒரு தாய்
உதிரம் சொட்டச் சொட்ட ஓடி ஒளிந்தாள்.

அன்றுதான்
அந்தக் குழந்தை இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து
இரண்டாவது வாரத்தை எட்டிப் பிடிக்கிறது .

 தூங்கிக் கிடந்த எங்கள் சின்னஞ்  சிறுசுகளோ
திக்குத் தெரியாமல் பறந்து போயின
 பல்வேறு திசைகளில் ...

அன்று இரவு 
 விடியலுக்காக எங்கள் கிராமம் 
அமைதியாகக் காத்துக்கொண்டிருந்தது . 

ஆம் 
எங்கள் உழைப்பின் சிங்கங்கள்
 சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த
 காசு பணங்கள் கொள்ளை போயின ! 

எங்கள் உயிருக்கும் உழைப்புக்கும்
 உற்ற நண்பனாய் இருந்துவரும்
 ஆடுகளையும் மாடுகளையும் 
முதுகில் குத்தினார்கள்
 புத்தியுள்ள மனிதர்கள்
 துப்பாக்கி முனையிலுள்ள கத்தியினால்!

 பாவம்
 அவை வாய் விட்டு 
அழ முடியாமல் கண்ணீர் சிந்தின !  

 பாருக்குள்ளே நல்லநாடு எங்கள்
 பாரதநாடு -என்றல்லவா
 பாடி விட்டுச்  சென்றான் அந்தப் பாரதி !

இன்று 
இந்தப் பாடல் வரிகளை 
நினைக்கும் பொது எங்களுக்கு ஐயம் வருகிறது.
இது எங்கள் நாடுதானா?

 ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கங்களே!
 நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள்தானே !
இன்னும் ஏன் எங்களை அடிமையாகவே
 நினைக்கிறீர்கள் ?

 வெள்ளை வண்டியில் வந்து
 ஊரைச் சிவப்பாக்குகிறீர்கள் ? 

சாதி ஒழிப்போம் என்று    
மூச்சுக்கு முந்நூறு முறை
 பிரசங்கம் செய்கிறீர்கள் 
சாதியை ஒழிப்பது இப்படிக் கொன்றுதானா?

நம்நாடு ஒரு சுதந்திர நாடல்லவா ?
 பின்னர் ஏன் நமக்குள் ஏற்றத் தாழ்வுகள் !

 நாங்கள்
 உங்கள் சொத்துக்களையா கேட்கிறோம் ?
 எங்கள் உரிமைகளைத்தானே கேட்கிறோம் !

இதைக் கேட்டால் நாங்கள் 
வன்முறையாளர்கள் ,தீவிரவாதிகள்
 பயங்கரவாதிகள் என்ற பட்டமா ?

 மனிதர்களே ! கொஞ்சம் சிந்தியுங்கள்!
 நாங்களோ அமைதியை விரும்பும் ஆழ்கடல் !

அடக்கு முறைகளுக்கு அடிபணிய மாட்டோம் !
அன்பு காட்டுபவர்களை  அரவணைப்போம் !
அமைதி குலைப்போரைப் புறக்கணிப்போம்  !

சமத்துவம் சகோதரத்துவம் எங்கள் உயிர் மூச்சு !
எங்களை மிதித்தால்  விபரீதங்களாகும்!
 மீறினால், விபத்துகளாகும்! 

மலைகளோடு மோதவேண்டாம் !
 மோதினால் நீங்கள் முகமிழந்து போவீ ர்கள் ! 

 நாங்கள் புழுக்கள் அல்ல நசுக்கி விடுவதற்கு !
பொறுமையாகப் பாயும் புலிகள் !

பாய்ந்தால், யாரை அடிக்குமென்று
 எங்களுக்கே தெரியாது !

சாது மிரண்டால் காடு கொள்ளாது !
குண்டாந்தடி வெல்லாது ! குண்டுகளும் வெல்லாது !

 நாங்கள் தீ  
நல்லவர்களுக்குத் தீபங்களாவோம்! 
அல்லாதவர்க்குத்  தீ மூட்டுவோம் !  

o   

Sunday, 25 March 2012

உன் நினைவுகள்...



அன்பானவளே !
 உனக்காக எழுதுகின்ற
என் கவிதைகள் எல்லாம்
என் கண்ணீரால் கரைந்து போகிறதே !
கண்ணீரால் கரையாத மை இருந்தால்
ஒன்று சொல்.

எல்லோரும் உன்னை
 சிக்கனக்காரி என்றார்கள்
 அதற்காக இப்படி மிஸ்கால் கொடுத்தா
சிக்கனத்தை வெளிப்படுத்துவது ?

நீ பேசும்போது
ஒரு காதலியைப்போல் பேசுகிறாய்...
 நான் பேசும்போதும் மட்டும்
ஒரு ஆசிரியைப்போல் கண்டிக்கிறாய் .
ஏன் இந்த முரண்பாடு ?

 நீ தூரத்தில் இருக்கும்போது
 உன்  நினைவுகள்
 என்னைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது...
 ஆனால்,
 நீ அருகில் வரும்போது மட்டும்
 இலக்குவணன் போட்ட கோட்டைப்போல்
 தள்ளியே நிற்கிறேன் அது ஏன் ?

எப்போதும் உன் நினைவுகள்
என்னை துவைத்து எடுக்கிறது
 வாஷிங் மெஷினில்
அகப்பட்ட துணியைப்போல்  ...

நீயாவது அடிக்கடி
 என் வீட்டுப்பக்கம் வந்து போயேன் ...
அப்போதாவது மின் தட்டுப்பாட்டால்
 இருளில் மூழ்கிக்கிடக்கும்   
 எங்கள் தெருவீதியாவது
 வெள்ளிச்சம் பெறட்டும்!  

 சில நேரங்களில் 
நீ கோபப்பட்டுப் பேசினால் 
என் மனசு காயம் பட்டுப்போகிறது !
எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் 
 இந்த மேஜிக் கத்தியை ?

 ஒருநாள் ...
நான் உன்னை நேசிக்கிறேன் என்றேன். 
என் பணத்திற்காகவா ? 
என் அழகிற்காகவா? என்றாள் .
 இரண்டிற்கும் என்றேன் !

உன் பெயரை --
ஒரு நாளைக்கு ஓராயிரம்முறை 
உச்சரிக்கிறேன் என்றேன் .
உங்கள் நாக்கிற்கு
 நல்ல பயிற்சி என்றாள்.!

நான்உன்பக்தன்என்றேன்
 நாட்டில் ஒரு பித்தனின்
 எண்ணிக்கை கூடிவிட்டது என்றாள் .!
Facebook Google Digg Pinterest