அன்பானவளே !
உனக்காக எழுதுகின்ற
என் கவிதைகள் எல்லாம்
என் கண்ணீரால் கரைந்து போகிறதே !
கண்ணீரால் கரையாத மை இருந்தால்
ஒன்று சொல்.
எல்லோரும் உன்னை
சிக்கனக்காரி என்றார்கள்
அதற்காக இப்படி மிஸ்கால் கொடுத்தா
சிக்கனத்தை வெளிப்படுத்துவது ?
நீ பேசும்போது
ஒரு காதலியைப்போல் பேசுகிறாய்...
நான் பேசும்போதும் மட்டும்
ஒரு ஆசிரியைப்போல் கண்டிக்கிறாய் .
ஏன் இந்த முரண்பாடு ?
நீ தூரத்தில் இருக்கும்போது
உன் நினைவுகள்
என்னைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது...
ஆனால்,
நீ அருகில் வரும்போது மட்டும்
இலக்குவணன் போட்ட கோட்டைப்போல்
தள்ளியே நிற்கிறேன் அது ஏன் ?
எப்போதும் உன் நினைவுகள்
என்னை துவைத்து எடுக்கிறது
வாஷிங் மெஷினில்
அகப்பட்ட துணியைப்போல் ...
நீயாவது அடிக்கடி
என் வீட்டுப்பக்கம் வந்து போயேன் ...
அப்போதாவது மின் தட்டுப்பாட்டால்
இருளில் மூழ்கிக்கிடக்கும்
எங்கள் தெருவீதியாவது
வெள்ளிச்சம் பெறட்டும்!
சில நேரங்களில்
நீ கோபப்பட்டுப் பேசினால்
என் மனசு காயம் பட்டுப்போகிறது !
எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்
இந்த மேஜிக் கத்தியை ?
ஒருநாள் ...
நான் உன்னை நேசிக்கிறேன் என்றேன்.
என் பணத்திற்காகவா ?
என் அழகிற்காகவா? என்றாள் .
இரண்டிற்கும் என்றேன் !
உன் பெயரை --
ஒரு நாளைக்கு ஓராயிரம்முறை
உச்சரிக்கிறேன் என்றேன் .
உங்கள் நாக்கிற்கு
நல்ல பயிற்சி என்றாள்.!
நான்உன்பக்தன்என்றேன்
நாட்டில் ஒரு பித்தனின்
எண்ணிக்கை கூடிவிட்டது என்றாள் .!
நான்உன்பக்தன்என்றேன்
நாட்டில் ஒரு பித்தனின்
எண்ணிக்கை கூடிவிட்டது என்றாள் .!




No comments:
Post a Comment