படப்பிடிப்பிற்குச் செல்வதைப்போல்
ஒப்பனையோடு கையில்
ஒரு அழகிய கைப்பை!
துணிக்கடையில் வரவேற்கும்
அலங்கார பொம்மைகளைப்போல்
வண்ண வண்ண அணிவகுப்பு !
அரைகுறையாய்ச் சாப்பிட்டு
அவசரமாய்ப் பஸ் பிடித்து
மணி அடிப்பதற்குள்
பள்ளியின் முதல்வரின்
பார்வைக்குப் பவ்வியமாய்
வணக்கம்போட்டு
வகுப்பறையில் நாளும் ...
வீட்டில்தொல்லை தாங்காமல்
மூட்டை முடிச்சிகளோடு
பிஞ்சுக் குழந்தைகளையும்
கொண்டு வந்து தள்ளிவிட்டுச்
செல்லும் பெற்றோர்கள்...
அழமட்டுமே தெரிந்திருக்கும்
குழந்தைகளுக்கு அ, ஆ ....
சொல்ல வைத்துத்
தொண்டத்தண்ணி வற்றிப்போகும்
கான்வென்ட் டீச்சருக்கு !
அடிக்கடி தேர்வு எழுதி
அலுத்துப்போகும் குழந்தைகள் !
விடைத்தாளைத் திருத்தித் திருத்தி
வேதனையில் மூழ்கிப்போகும்
கான்வென்ட் டீச்சர்கள்...
அதிக மதிப்பெண்கள் வாங்கலையே
என அலட்டிக்கொள்ளும் பெற்றோர்கள் !
பள்ளியின் தரத்தை உயர்த்த
பள்ளி நிர்வாகியின்
தரங்கெட்ட அர்ச்சனைகள்!
இத்தனையும் சுமந்துகொண்டு
பள்ளியை அலங்கரிக்கும்
கான்வென்ட் டீச்சர்கள்...
ஆலையில் பிழிந்த சக்கையில் கூட
எறும்புகள் ஊறும்
இவர்களைப் பிழிந்தால்
ஒரு சொட்டு இரத்தம் கூடக்
கண்ணீராய் மாறும் !
இவர்கள் பார்வைக்கு மட்டுமே
சிவப்பு ரோஜாக்கள்!
வேலை கிடைக்குமென்று
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
புதுப்பித்து ...புது ப்பித்து
இவர்களின் தலைமுடியோ
வெள்ளை அடித்துக்கொண்ட
அதிசயம்தான் நிகழ்ந்துபோனது !
போடுகின்ற சோப்புக்கும்
அடிக்கின்ற பவுடருக்கும்
நாளுக்கொரு சேலைக்கும்
கொடுக்கின்ற ஊதியம் சரியாய்ப் போகும்.
பின்னர் ,அவர்களுக்கு எங்கே
அவர்கள் வாழ்க்கையைப் பற்றி
யோசிக்க நேரம் !
யோசிப்பதெல்லாம்
அவர்களிடம் விட்டுச் செல்லும்
வேலை கிடைக்குமென்று
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
புதுப்பித்து ...புது ப்பித்து
இவர்களின் தலைமுடியோ
வெள்ளை அடித்துக்கொண்ட
அதிசயம்தான் நிகழ்ந்துபோனது !
போடுகின்ற சோப்புக்கும்
அடிக்கின்ற பவுடருக்கும்
நாளுக்கொரு சேலைக்கும்
கொடுக்கின்ற ஊதியம் சரியாய்ப் போகும்.
பின்னர் ,அவர்களுக்கு எங்கே
அவர்கள் வாழ்க்கையைப் பற்றி
யோசிக்க நேரம் !
யோசிப்பதெல்லாம்
அவர்களிடம் விட்டுச் செல்லும்
பள்ளிக் குழந்தைகளின் படிப்பை மட்டுமே !
பெருகிப்போனது மாணவர்களின் எண்ணிக்கை
உயர்ந்துபோனது பெற்றோர்களின்
நன்கொடையால் ...பள்ளியின் கட்டிடங்கள் !
இன்னும் உயராமல் இருப்பது
அவர்கள் வாழ்க்கை மட்டுமே !
அலங்கோல ஆட்சியாளர்களின் சட்டத்தில்
அப்பனும் பிள்ளையும்
அருகருகே அமர்ந்து டி.ஆர் .பி . எழுதிய
அதிசயம் தான் நிகழ்ந்து போனது !
என்று ஒழியும் இந்த டி.ஆர் .பி .
அன்று தணியும் அவர்கள் தாகம்!
0
பெருகிப்போனது மாணவர்களின் எண்ணிக்கை
உயர்ந்துபோனது பெற்றோர்களின்
நன்கொடையால் ...பள்ளியின் கட்டிடங்கள் !
இன்னும் உயராமல் இருப்பது
அவர்கள் வாழ்க்கை மட்டுமே !
அலங்கோல ஆட்சியாளர்களின் சட்டத்தில்
அப்பனும் பிள்ளையும்
அருகருகே அமர்ந்து டி.ஆர் .பி . எழுதிய
அதிசயம் தான் நிகழ்ந்து போனது !
என்று ஒழியும் இந்த டி.ஆர் .பி .
அன்று தணியும் அவர்கள் தாகம்!
0




No comments:
Post a Comment