சாதித் தீக்குள் இரையாகும்
சாதாரண மக்கள்
மதத்தின் பெயரில்
மனிதக் கொலைகள் !
தேசமெல்லாம் பொங்கி வழியும்
ஊழலின் ஊற்றுக் கண்கள் !
விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம் !
வயிற்றில் ஓடுகின்றன
வறுமையின் கோடுகள் !
அரசியல் போர்வையில்
தாராளமாய் டாஸ்மாக் கடைகள் !
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
அனுமார் வாலாய்க்
காத்திருப்போர் பட்டியல் !
திரும்பும் திசையெல்லாம்
கொலைக்கொள்ளைகள் !
கொள்ளையர்களின் கையில்
இந்திய தேசம் !
இளைஞர்களின் மனசில்
இன்னொரு சுதந்திரம் !
0




மனிதனின் அறிவு செல்லுபடியாகிற இடங்களில் கட்டாயம் ஊழல் நிறைந்துள்ளது. அறிவை சரியான முறையில் பயன்படுத்தும் போது இது போன்ற நிகழ்வுகள் நிகழாது என்பது உறுதி. இந்தச் சமூகம் உங்கள் கனவுகளை எந்த அளவு பாதிக்கும் என்பதற்கு இந்த கவிதை சான்று போதுமானது. வாழ்த்துகள்... இன்னும் உங்களின் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்...
ReplyDelete