எதை மறந்தாலும் இதை மறப்பதில்லை
எதைத் தொலைத்தாலும் இதை தொலைப்பதில்லை
அப்படியே தொலைத்தாலும் ...
அடுத்தநாளே என் கையில் அலங்கரிக்கும் !
அவ்வப்போது புதியதாய் பார்க்கும்போது -எனக்கு
புதுப்பெண் அனுபவம்தான் !
நடக்கும் போதும் படுக்கும் போதும்
பாத்ரூம் செல்லும் போதும்- ஒரு
புலனாய்வுத் துறையினரைப் போல் என்னோடு வரும் .
அழைப்பது ஆணாக இருந்தால்
' ஹகூவை'- போல் என் பேச்சிருக்கும்...
அழைப்பது பெண்ணாக இருந்தால்
மரபுக் கவிதையாய் நீட்சியடையும் ...
பொய் சொல்லத் தெரியாமல் இருந்தேன்
இது வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு பொய் ....
இது கையில் இருந்தாலும் பையில் இருந்தாலும்
கழுத்தில் தொங்கினாலும் இடுப்பில் இருந்தாலும்
இதனால் வரும்' அகால மரணத்தை' யாரால் தடுக்கமுடியும்?
வீட்டுக்குள் இருந்த பைத்தியங்கள் போய்.. .
இப்போது _
வீதியெங்கும் பைத்தியங்கள்!
மருத்துவ ஆராச்சியில் --
காது செவிடாகும் , புற்று நோய் வரும் ,
நுரைஈரல் பலவினமாகும் ஆயுள் குறையும் ...
என்றார்கள் ... அது எந்தநோயோ ..
எதோ ஒரு நோய்க்கு ...
நானும் தயாராகிவிட்டேன் ...!
o



