Wednesday, 28 September 2011

கடல் அலைகளாய்...

*கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி அவர்களின்
*வெள்ளை வண்டி*-- கவிதைத்  தொகுப்பிலிருந்து  சில கவிதைகள் ....

இரவு 9 .07 மணித்துளிகள்
 கைபேசி மெல்லச் சிணுங்கியது ...  

எடுத்துப் பார்த்தேன்    
தகவல் உன்னிடமிருந்து   
தாமதிக்கவா முடியும் ?

மனசுக்குள்  மின்சார ஒளிவெள்ளம்
இரவு  பகலானதைப்  போல்  
கையில்  கிடைத்த  ஒரு புதையலாய்
அந்தச்  செய்தியை  
அந்தரங்கமாய்  வாசித்தேன் .

என்  இதயம்  வெடித்துச்  சிதறியதுபோல்
எரிமலைக் குழம்பாய்
அந்த இரவின் மடியில்  நான்

ஓர்  உயிரைக்  காப்பாற்ற  
மருத்துவர்கள்  நோயாளிகளோடு 
நடத்தும் போராட்டத்தைப் போல் 
என் நினைவுகள் பேரதிர்வால்
இடிந்துபோனது .

 "இறந்து விடுவேன் நான்  
இருபத்து மூன்று நாட்களில்.       
மீண்டும் உன் வாழ்வில் நான்
குறுக்கிட மாட்டேன்  ."

இவைதான் 2008 - ஆம்  ஆண்டை
தகர்த்தெறியப்  பதுக்கி வைக்கப்பட்ட  
ஜெலட்டின்  குச்சிகள் !

திட்டமிட்ட  சதி !

"நினைவுடன் 
2009 -க்கான என் முதல் புத்தாண்டு வாழ்த்துகள் "

குறுஞ்செய்தி முற்றுப் பெற்றது.         
இப்போது              
கடல் அலைகளாய் எனக்குள் நீ !

o


No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest