உனது ---
புன்னகை முத்துகள்
எனது இதய அறைக்குள்
பதிக்கப் பட்டுப் பார்வைக்கு
வைக்கப் பட்டுள்ளன!
உனது---
பேச்சுகள்
என் மனத்திரையில்
ஆனந்த ராகத்தில்
மறுபதிவு செய்யப்பட்டு
என்னைப் பரவசப்
படுத்திக் கொண்டிருக்கின்றன!
உனது ---
முக தரிசனம்
கிடைக்கும் போது
நான்
அமாவாசைலிருந்து
விடை பெற்றுக்கொள்கிறேன்!
உனது ---
ஸ்பரிச தழும்புகள்
எனக்குள் புகுந்து
உறவைப் புதுப்பித்து
விடுகின்றன!o




No comments:
Post a Comment