அன்று அவசரமாய்க்
கடிதமொன்று கொடுத்ததேனடி ?
இன்று பிரிவு நம்மைப்
பார்த்துச் சுடுவதேனடி ?
என் பெயரைச் சுருக்கி எழுதி
அழைத்து மகிழ்ந்ததேனடி?
என் நெஞ்சில் சுருக்குக் கயிறைப்
போட்டு மாட்டியதேனடி ?
கதவருகில் நின்று
கண் சிமிட்டி அழைத்ததேனடி?
காதல் கதைசொல்லிக்
கையில் விலங்கு போட்டதேனடி ?
உனக்கு என்னடி
ஒன்றுமில்லை உனக்கடி
எனக்கடி விழுந்ததடி
உன் சொல்லடி
உன் பார்வை தந்த வெளிச்சம்
என் கண்ணில் இல்லையடி மிச்சம்
உன் உறவு மாறிப் போனதால்
என் உயிரும் பிரிந்து போகுமோ ?
பொட்டு வைப்பதும்
பூச்சூடி விடுவதும்
என்றும் நீயே எனக்கென
கையில் அடித்துச் சொன்னதேனடி ?
வானும் மண்ணும் போல
வாழ்வும் வளமும்
உன்னோடென்று உயிரின் மீது
உறுதியிட்டுச் சொன்னதேனடி ?
என் கண்களுக்குள்
கண்ணீர் வற்றிப் போனதேனடி ?
நம் காதல் இன்று
கானல் நீராய் மாறிப் போனதேனடி ?
காரணம் என்னவென்று
உன்னில் உன்னைக் கேட்டுப் பாரடி ?
என் இதயம் என்றும்
உனக்கே திறந்து கிடக்குமேயடி
உனக்கு விருப்பமில்லை என்றால்
என் இறப்பிலாவது கலந்துகொள்ளடி
உன் கையில் நெருப்பை அள்ளி
என் உடலை எரித்துவிட்டுப் போவாயடி !
o
போட்டு மாட்டியதேனடி ?
கதவருகில் நின்று
கண் சிமிட்டி அழைத்ததேனடி?
காதல் கதைசொல்லிக்
கையில் விலங்கு போட்டதேனடி ?
உனக்கு என்னடி
ஒன்றுமில்லை உனக்கடி
எனக்கடி விழுந்ததடி
உன் சொல்லடி
உன் பார்வை தந்த வெளிச்சம்
என் கண்ணில் இல்லையடி மிச்சம்
உன் உறவு மாறிப் போனதால்
என் உயிரும் பிரிந்து போகுமோ ?
பொட்டு வைப்பதும்
பூச்சூடி விடுவதும்
என்றும் நீயே எனக்கென
கையில் அடித்துச் சொன்னதேனடி ?
வானும் மண்ணும் போல
வாழ்வும் வளமும்
உன்னோடென்று உயிரின் மீது
உறுதியிட்டுச் சொன்னதேனடி ?
என் கண்களுக்குள்
கண்ணீர் வற்றிப் போனதேனடி ?
நம் காதல் இன்று
கானல் நீராய் மாறிப் போனதேனடி ?
காரணம் என்னவென்று
உன்னில் உன்னைக் கேட்டுப் பாரடி ?
என் இதயம் என்றும்
உனக்கே திறந்து கிடக்குமேயடி
உனக்கு விருப்பமில்லை என்றால்
என் இறப்பிலாவது கலந்துகொள்ளடி
உன் கையில் நெருப்பை அள்ளி
என் உடலை எரித்துவிட்டுப் போவாயடி !
o



