வேப்ப மரத்தின் நிழலும்
ஏரிக்காற்றின் வாசமும்
அனுபவித்த நான் ....இன்று
கழிவுகளின் துர்நாற்றத்தாலும் ...
துரத்தித் துரத்தி இரத்தம் குடிக்கும்
கொசுக்களின் படையெடுப்பாலும்
என் இரவுகள் அழிக்கப் படுகின்றன !
வசிக்கும் வீட்டில்
திருடன் வந்து போனால்கூட -நாளையச்
செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும்
பார்த்துதான் தெரிந்துகொள்வார்கள் ...
பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் ...
வீட்டின் உரிமையாளர்களும் !
விடியற்காலையில் ...என் தூக்கத்தைக் கலைக்கும்
தெருக்கோடியின் கூரையின்மேல்
கூவி அழைக்கும் சேவலும்
என் வீட்டு முருங்கை மரத்தின்மேல்
காகங்களும் குருவிகளும் சண்டையிட்டுக் கொள்ளும்
சத்தம்கேட்டு படுக்கையில் எழுவேன் ...
இங்கு படுக்கும்போதும் விழிக்கும்போதும்
ஆம்புலன்ஸ் சத்தமும்... அடுத்தவர்களின்
செவிப்பறைகளை செலவில்லாமல்
செவிடாக்கும் ஒலிபெருக்கிகளும் ...
வெவ்வேறு திசைகளில்...
அலைந்து திரிந்ததால் ...
உண்ட உணவு செறிமானமானது.
நகரத்தில் எல்லாமும் வீட்டுக்கருகே கிடைப்பதனால்
உண்ட உணவு செறிமானமாக
மருத்துவரிடம் ஆலோசனை அவ்வப்போது...!
கிராமத்தில் வாழ்க்கையே
ஓட்டமாய் ...இருந்தது.
நகரத்தில் நலமுடன் வாழவே
நடைப் பயிற்சி கட்டாயமானது !
பிள்ளைகளின் படிப்பிற்கும்
நகரத்தின் நாகரீகத்திற்கும்
நக(ர)த்திற்கு குடி வந்தவர்கள்
உறவுகளை தொலைத்து விட்டார்கள் .
உடைமைகளை இழந்து விட்டார்கள் .
எதிர்காலப் பிள்ளைகளை நம்பி
எத்தனையோ பெற்றோர்கள்
நிராயுதபாணிகளாய் ....
நினைவுகள் வரும்போது ...
கிராமத்திற்குச் சென்றால்
அப்பா அம்மா விட்டுச் சென்றவைகள்
கண்முன்னே ஒவ்வொன்றாய் ...
கதைச் சொல்ல வந்து நிற்கும்!
கொள்ளைபுரம் சென்றால் ...
சின்னவயதில் அப்பாவுடன்
மோழியைப் பிடித்துக்கொண்டு
மண்கட்டியில் தட்டுத் தடுமாறி
ஏர் ஓட்ட கற்றுக்கொண்ட
காட்சி ஒருபுறம் ....
அப்பா வரப்பில் அண்டைபோடும்போது
அத்தனை கூலியாட்களையும்
அசரவைக்கும் அழகு ஒருபுறம் ...
அப்பா ஏர் ஓட்ட ...
அம்மா, ஏர் போன வழியில்
மல்லாட்டப்பயிறை மடியில்
கட்டிக்கொண்டு விரல் இடுக்கில்
போட்ட அழகு ஒருபுறம் ....
இரவு களத்துமேட்டில் நெல்லுப்பட்டரையில்
அப்பாவுடன் குளிருக்குச் சம்பை
தலைப் பகுதியில் கவுத்தும் ,
சாக்குப் பையில் காலையும்
நுழைத்துக்கொண்டு திக்குத் ...திக்கென்று
ஏரியின் அருகில் தூங்கியும் தூங்கமலும்
காவலுக்குக் காத்துக் கிடந்தது ஒருபுறம் ...
ஓர் இரவில் பெய்த பேய்மழையால் ...
விண்ணை அதிரவைக்கும் வெடிச்சத்தமும்
கேட்டுக் கேட்டு விடிவதுதெரியாமல்
ஒவ்வொரு நாளும் வேலைக்கு
ஓட்டப் பந்தையமாய் ...!
கிராமத்தில் இருந்தபோது
ஒவ்வொரு பொருள்களுக்கும்வெவ்வேறு திசைகளில்...
அலைந்து திரிந்ததால் ...
உண்ட உணவு செறிமானமானது.
நகரத்தில் எல்லாமும் வீட்டுக்கருகே கிடைப்பதனால்
உண்ட உணவு செறிமானமாக
மருத்துவரிடம் ஆலோசனை அவ்வப்போது...!
கிராமத்தில் வாழ்க்கையே
ஓட்டமாய் ...இருந்தது.
நகரத்தில் நலமுடன் வாழவே
நடைப் பயிற்சி கட்டாயமானது !
பிள்ளைகளின் படிப்பிற்கும்
நகரத்தின் நாகரீகத்திற்கும்
நக(ர)த்திற்கு குடி வந்தவர்கள்
உறவுகளை தொலைத்து விட்டார்கள் .
உடைமைகளை இழந்து விட்டார்கள் .
எதிர்காலப் பிள்ளைகளை நம்பி
எத்தனையோ பெற்றோர்கள்
நிராயுதபாணிகளாய் ....
நினைவுகள் வரும்போது ...
கிராமத்திற்குச் சென்றால்
அப்பா அம்மா விட்டுச் சென்றவைகள்
கண்முன்னே ஒவ்வொன்றாய் ...
கதைச் சொல்ல வந்து நிற்கும்!
கொள்ளைபுரம் சென்றால் ...
சின்னவயதில் அப்பாவுடன்
மோழியைப் பிடித்துக்கொண்டு
மண்கட்டியில் தட்டுத் தடுமாறி
ஏர் ஓட்ட கற்றுக்கொண்ட
காட்சி ஒருபுறம் ....
அப்பா வரப்பில் அண்டைபோடும்போது
அத்தனை கூலியாட்களையும்
அசரவைக்கும் அழகு ஒருபுறம் ...
அப்பா ஏர் ஓட்ட ...
அம்மா, ஏர் போன வழியில்
மல்லாட்டப்பயிறை மடியில்
கட்டிக்கொண்டு விரல் இடுக்கில்
போட்ட அழகு ஒருபுறம் ....
இரவு களத்துமேட்டில் நெல்லுப்பட்டரையில்
அப்பாவுடன் குளிருக்குச் சம்பை
தலைப் பகுதியில் கவுத்தும் ,
சாக்குப் பையில் காலையும்
நுழைத்துக்கொண்டு திக்குத் ...திக்கென்று
ஏரியின் அருகில் தூங்கியும் தூங்கமலும்
காவலுக்குக் காத்துக் கிடந்தது ஒருபுறம் ...
ஓர் இரவில் பெய்த பேய்மழையால் ...
பாட்டன் வெட்டிய கிணறு குட்டையானது .
பங்காளிகளுக்குள் கேள்விக் குறியானது?
அப்பாவின் அயராத முயற்சியால்
மறுபடியும் புதிய கிணறானது .
இன்று பங்காளிகளுக்குள் ஒற்றுமையின்மையால்
அப்பா கட்டிய கிணறு
எனக்குப் பயன்படாமலே போனது !
o




No comments:
Post a Comment