Tuesday, 4 October 2011

நட்புச் சாகக்கூடாது !

ஆறாம் வகுப்பில்தான்
அவனும் நானும் முதல் சந்திப்பு  . 
இடைவேளையில் இணைந்தது கொள்வோம்!

ஐஸ்,கமர்கட்டு ஒருவரைவிட்டு  ஒருவர்  
சாப்பிடுவதில்லை !

மாணவர்களுக்குள் பொறாமை  
எங்களைப் பார்க்கும்போது.

வீட்டில் கோபத்தோடு வந்துவிடுவேன்  
அப்பா மதிய உணவை மறக்காமல் 
கொண்டு வந்து கொடுப்பார் .

இன்றும் சகமாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால் 
அப்பாவை  நினைவுட்டி நெகிழ்ந்து போவார்கள்

மதியம் சாப்பாடு டப்பாவைத் திறக்கும்போது  
நண்பன் காணாமல் போவான் !

கண்டுபிடித்து இழுத்து வந்து 
உண்டு மகிழ்வோம் .

எவனாவது அடித்துவிட்டால்
எட்டி உதைப்பான்...கோவம் மூக்கின்மேல்!

டியூஷனில் கொடுக்கும் நோட்சை
மறவாமல் நண்பனுக்குக் கொடுத்துப்
படிக்கச் சொல்வேன் !

ஆசை, அவனும் பாசாக வேண்டுமே  !
பத்தாம் வகுப்பிற்குப் பின் பிரிந்து போனோம் !
பல வருடங்கள் கடிதங்கள் மட்டுமே!
நட்பை வளர்த்து வந்தது...

பட்டப் படிப்போடு வேலை கிடைக்காமல் நான் !
பத்தாம் வகுப்பில் தோல்வியோடு போனவன்
பத்துப் பேருக்கு முதலாளியாக அவன் !

என் இருண்ட வாழ்க்கைப் பயணம்
அவனால் வெளிச்சமானது!

நம்பிக்கை எனக்குள் அழுத்தமானது.   
எனக்கும் கடமை உண்டு
என்  நட்புச் சாகக்கூடாது !

O

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest