என்
ஈரமான விழிகளில் -நீயோ
ஓரமாய் ஓய்வெடுத்தாய்
ஓய்வெடுத்த என் நினைவில் -என்னைப்
பாய் விரித்துப் படுக்கவைத்தாய்
படுக்கவைத்த பைங்கிளியே -உன்
சிரிப்பெங்கே தொலைத்து விட்டாய்
தொலைத்து விட்ட தொடுவானமே-உன்
தூறல் பட்டுத் துடித்தெழுந்தேன்
துடித்தெழுந்து பார்க்கையிலே -உன்
மடிமீது தவம் கிடந்தேன் !
தவம் கிடந்த ஞானத்திலே-எனக்குள்
தவழ்ந்து வந்து முத்தமிட்டாய்
முத்தம் பட்ட மோகத்திலே -உனக்குள்
சத்தமின்றி முத்தெடுத்தேன்
முத்தெடுத்துப் பார்க்கையிலே -என்
முகச் சாயல் தெரிந்ததடி
தெரிந்து கொண்ட என் கண்மணியே -நீ
புரிந்து கொண்ட என் மனைவியடி!
o




No comments:
Post a Comment