Monday, 31 October 2011

கண் சிமிட்டி அழைத்ததேனடி ?




அன்று அவசரமாய்க்
                கடிதமொன்று கொடுத்ததேனடி ?
இன்று பிரிவு நம்மைப் 
                பார்த்துச் சுடுவதேனடி ?

என் பெயரைச் சுருக்கி எழுதி 
               அழைத்து மகிழ்ந்ததேனடி?
என் நெஞ்சில் சுருக்குக் கயிறைப்
               போட்டு மாட்டியதேனடி ?

கதவருகில் நின்று
               கண் சிமிட்டி அழைத்ததேனடி?
காதல் கதைசொல்லிக்
               கையில் விலங்கு போட்டதேனடி ?

உனக்கு என்னடி
               ஒன்றுமில்லை உனக்கடி
எனக்கடி விழுந்ததடி
                உன் சொல்லடி

உன் பார்வை தந்த வெளிச்சம்
               என் கண்ணில் இல்லையடி மிச்சம்
உன் உறவு மாறிப் போனதால்
               என் உயிரும் பிரிந்து போகுமோ ?

பொட்டு வைப்பதும்
               பூச்சூடி விடுவதும்
என்றும் நீயே எனக்கென
               கையில் அடித்துச் சொன்னதேனடி ?

வானும் மண்ணும் போல
               வாழ்வும் வளமும்
உன்னோடென்று உயிரின் மீது
                உறுதியிட்டுச் சொன்னதேனடி ?

என் கண்களுக்குள்
               கண்ணீர் வற்றிப் போனதேனடி ?
நம் காதல் இன்று
               கானல் நீராய் மாறிப் போனதேனடி ?

காரணம் என்னவென்று
               உன்னில் உன்னைக் கேட்டுப் பாரடி ?
என் இதயம் என்றும்
               உனக்கே திறந்து கிடக்குமேயடி

உனக்கு விருப்பமில்லை என்றால்
               என் இறப்பிலாவது கலந்துகொள்ளடி
உன் கையில் நெருப்பை அள்ளி
               என் உடலை எரித்துவிட்டுப் போவாயடி !

o   

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest