நட்பு மனிதர்களுக்குக் கிடைத்த மகத்தான ஆயுதம்!
நட்பு பறவைகளுக்கும் உண்டு ;விலங்குகளுக்கும் உண்டு .
நட்பின் பயணம் பேருந்திலும் கிடைக்கும் ; பேனாவிலும் கிடைக்கும் .
தெரிந்தும் கிடைக்கும் ; தெரியாமலும் கிடைக்கும் .
நட்புக்கு முகம் தேவையில்லை; அறிமுகம் இருந்தாலே போதும் .
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில்
ஏற்படுகின்ற நட்பே காதலெனும் தேரை கட்டியிழுக்கிறது !
நட்பு ஒன்றே எதற்கும் கட்டுப்படாது .
நட்பு ஒன்றே எதையும் காயப்படுத்தாது .
நட்புக்கு நிறம் இல்லை; சாதி இல்லை; மதம் இல்லை .
நட்புக்கு முறிவு இல்லை ; ஆனால் பிரிவு உண்டு .
நட்பு ஒன்றே மனிதர்களை
அறிமுகப்படுத்தும் அடையாளச் சின்னம் !
நட்பு இல்லையெனில் உறவுகள் இல்லை .
உறவுகள் இல்லையெனில் உயிர்கள் இல்லை .
நட்பு சிலருக்கு வாழ்க்கையைத் தருகிறது .
சிலருக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது .
நட்பு ஒற்றுமையை வளர்க்கும்; உயிரைக் காக்கும் .
நட்பே உலக நாடுகளை ஒன்றினைக்கும் ...
செயற்கைக் கோளாகும் !
மனிதர்களே ! நட்பு செய்யுங்கள் ....
மனிதப் பிறவியின் மகத்துவம் புரியும் !
மண்ணின் மடியில் மரம் வளர்ப்போம்...
மழை பொழியும் .....
மனித மனங்களில் நட்பை விதைப்போம் .....
உலகம் அமைதிபெறும்......!
o




No comments:
Post a Comment