Saturday, 8 October 2011

இறப்பும் அழகு !



சொல்லிக்கொண்டு வருவதில்லைக் காதல் 
திருடனாய் வந்து அள்ளிக் கொண்டு 
போவதென்பதே காதல் 

மவுன மொழியில் பேசிக்கொள்ளும் காதல் 
ஊமைப் போல அங்குமிங்கும் 
திருதிருவென்று முழிக்கும் அந்தக் காதல் 

விழிகள் இரண்டும் மோதிக்கொள்ளும் காதல் 
பாவை முகம் பார்த்துப் பார்த்து 
ரசிக்கும் அந்தக் காதல் 

புவியைப் போல் சுற்றிச் சுற்றி  வரும் காதல் 
பாவை முகம் பார்த்துப் பார்த்து 
ரசிக்கும் அந்தக் காதல்

தன்னைச் சுற்றி  நந்தவனமாய் 
மாற்றிக் கொள்ளும் அந்தக் காதல் 
சிரித்து சிரித்துப் பூத்துக் குலுங்கும் 
சிங்காரக் காதல்

ஒரசிப் பார்க்க துடிக்கும் அந்தக் காதல்
ஒரசிவிட்டால் உடலுக்குள்ளே
வெப்பச் சலனம் பாயும் அந்தக் காதல் 

சாதி மத  பேதங்களை சாகடிக்கும் காதல் 
சாதித் தீக்குள் தள்ளிவிட்டால் 
எதிர்த்து நிற்கும் அந்தக் காதல் 

உண்ணும் போதும் உறங்கும் போதும் 
உயிருக்குள்ளே புதைந்து கிடப்பது காதல் 

காதலின் விருந்து இளமையின் அழகு
காதலில் விழுந்தால் உலகமே அழகு

அவள் நடையும் அழகு
அவள் உடையும் அழகு
அவளை முதன்முதலில்
பார்த்ததும் அழகு -- மொத்தத்தில் 
அவள் படைப்பும் அழகு 

காதலில் தோல்வியும் அழகு - அது
சிந்தும் கண்ணீரும் அழகு  
காதலின் நினைவுகள் அழகு - அது 
பேசும் மொழியும் அழகு 

உயிரே அழகு  அவளே அழகு 
பிறப்பும் அழகு  இறப்பும் அழகு 

   

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest