Wednesday, 26 October 2011

என்னே தேசப்பற்று !




பிழைக்கப் போனவர்கள்
பிணமாய் வந்தார்கள் !

காலையிலிருந்து மாலைவரை
சூரிய அடுப்பில்
சுருங்கிப் போனவர்கள்
கள்ளச் சாராயத்தால் 
எரிந்து போனார்கள் .

உடம்பு வலிக்காக 
மருந்தாய் குடித்தது 
இவர்களின் உயிரையே குடித்தது .

தூக்கத்திர்காகக் குடித்தவர்கள்
தூங்கிப் போனார்கள்  நிரந்தரமாக .

யார்யாரோ வீட்டு அடுப்புப் புகைய 
இந்த ஏழைகளின் வீட்டின் 
அடுப்பையா அணைக்க வேண்டும் ?

மக்களுக்குக் காவலாய் இருப்பேன் 
என உறுதி எடுத்தவர்கள் 
மக்களைக் காவு கொடுக்கவா 
காச்சுபவர்களுக்குக் காவலாய் இருப்பது ?

கணவன் வருகைக்காக 
பொட்டோடும் பூவோடும் நிற்பவர்கள் 
கையில் பிண மாலையோடு 
அல்லவா நின்றார்கள் !

திண்பண்டத்தை எதிர்பார்த்து
நிற்கும் குழந்தைகள் 
அன்று அப்பாவிற்காக  
தீப்பந்தத்தோடு அல்லவா நின்றார்கள் !

இந்த ஏழைகளின்
கனவுத் தோட்டங்கள்
கல்லறைகளாய் மாறிப் போனதே !

சின்ன எழுத்தில்
இது விஷம் என்று விளம்பரம் .
படிக்காத பாமரனுக்கு எப்படி புரியும் ?

தண்ணீர் விடமாட்டேன் என்றவர்கள்
உயிர் பறிக்க
கேட்காமலே திறந்து விட்டார்கள்
கள்ளச் சாராயத்தை...

என்னே தேசப்பற்று !

o

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest