கல்லூரிச் சோலையில்
காலெடுத்து வைக்கையிலே--உன்
கண்பட்டு வீழ்ந்து விட்டேன்
காதல் சிறையினிலே!
காதல் மொழிப்பேசி நான்
கரம்பிடிக்க வருகையிலே --என்
கன்னத்தில் கொடுத்து விட்டாய்
கனிமுத்தம் ஒன்றனையே !
காதல் கவி பாடக்
கவி நான் வருகையிலே --உன்
கைத் தட்டிக் கவிழ்த்து விட்டாய்
கவியரங்க மேடையிலே!
மனசுக்குள் இடம் பிடிக்க நான்
மாதவம் புரிகையிலே--உன்
மணவறைக்குள் அழைத்து விட்டாய்
மனசுக்குப் பிடித்தவனையே !
புகைப்படம் எடுக்க நான்
புறப்படுகையிலே --உன்
புன்னகை மட்டும் அழித்து விட்டாய்
புகைப் படத்திற்குள்ளேயே!
நம் காலத்தின் சோதனையில்
கரைந்து விட்ட நினைவுகளே --என்
காதல் நந்தவனத்தில் பூத்துவிட்டன...
கண்ணீர்ப் பூக்களாகவே ...!
o
காலெடுத்து வைக்கையிலே--உன்
கண்பட்டு வீழ்ந்து விட்டேன்
காதல் சிறையினிலே!
காதல் மொழிப்பேசி நான்
கரம்பிடிக்க வருகையிலே --என்
கன்னத்தில் கொடுத்து விட்டாய்
கனிமுத்தம் ஒன்றனையே !
காதல் கவி பாடக்
கவி நான் வருகையிலே --உன்
கைத் தட்டிக் கவிழ்த்து விட்டாய்
கவியரங்க மேடையிலே!
மனசுக்குள் இடம் பிடிக்க நான்
மாதவம் புரிகையிலே--உன்
மணவறைக்குள் அழைத்து விட்டாய்
மனசுக்குப் பிடித்தவனையே !
புகைப்படம் எடுக்க நான்
புறப்படுகையிலே --உன்
புன்னகை மட்டும் அழித்து விட்டாய்
புகைப் படத்திற்குள்ளேயே!
நம் காலத்தின் சோதனையில்
கரைந்து விட்ட நினைவுகளே --என்
காதல் நந்தவனத்தில் பூத்துவிட்டன...
கண்ணீர்ப் பூக்களாகவே ...!
o



